இஸ்லாமிய நிதி மற்றும் வங்கி முறை (Islamic Finance and Banking)- ஓர் பார்வை

/
0 Comments
     

     இஸ்லாமிய நிதி மற்றும் வங்கி துறை (Islamic finance and banking), இந்த நிதி துறையில் சேர பல நாடுகள் ஆர்வமாக இருக்கிறது. மேலும் இதில் பல உலக நாடுகள் இணைந்து 1 டிரில்லியன் டலார் அளவு இத்துறையில் முதலீடு செய்துவருகின்றன. ஆனால் எப்படி இந்த இஸ்லாமிய நிதித்துறை இயங்குகிறது, எப்படி இஸ்லாமிய வங்கிகள் வழக்கமான வங்கிகளில் இருந்து வேறுப்பட்டு இருக்கிறது?
           இஸ்லாமிய வங்கிகளின் (Islamic Banking) அடிப்படை கொள்கை ஓர் சராசரி வர்த்தக முறையையே சார்ந்ததாக  இருக்கிறது. எப்படி வர்த்தகங்களிலும், வியாபாரங்களிலும்  பிரச்சனைகளை அதன் பங்குதாரர்கள் எல்லாருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. அம்முறைகளிலேயே இயங்குகிறது. ஆனால் மற்ற வங்கி நிறுவணங்கள் அவர்களிடம் ஏற்ப்படும் பிரச்சனைகளை அடுத்தவர்களுக்கு மற்றவே முயல்கின்றன. இதை ஆங்கிலத்தில் இப்படிக்கூறலாம், அதாவது The basic principle of Islamic banking is based on risk-sharing which is a component of trade rather than risk-transfer which is seen in conventional banking. அதாவது இஸ்லாமிய வங்கி ஆபத்து பகிர்வு (Risk-Sharing)வை அடிப்படையாகவும், மற்ற வங்கிகள் ஆபத்து பரிமாற்றம் (Risk-Transfer)வை அடிப்படையாகவும் கொண்டு இயங்குகிறது. பணம்  தந்து பணத்தையே இலாபமாக பெறுவதை வட்டியாக கணக்கிடப்படுகிறது. இது இஸ்லாமிய ஷரியத் அடிப்படையில் பாவமாகும். இஸ்லாமிய நிதி மற்றும் வங்கி ( Islamic finance and banking) வட்டி முறையின் முதலீட்டை தடைசெய்கிறது. இஸ்லாமிய வங்கிகள்  முஸ்லிம்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்வதிலும் அல்லது முதலீடு பெறுவதிலும்  தங்கள் மத அல்லது நெறிமுறை நம்பிக்கைகளில் குறைப்பாடு இன்றி, மார்க்கம் அனுமதித்தவாறு செய்ய வழிவகுக்குகிறது. இஸ்லாமிய வங்கிமுறைகளில் நம்முடைய தொழிலுக்கு ஏற்ப்ப பல திட்டங்கள் இருக்கின்றன.
இஸ்லாமிய ஷரியத்தில் வர்த்தகம் செய்ய தடைவிதிக்கப்பட்ட புகையிலை, மது, சூதாட்டம் அல்லது "ஹராம்" என கருதப்படும் துப்பாக்கி போன்ற சில துறைகளில் முதலீடு செய்வதையும் Islamic banking தடைசெய்கிறது.
எனினும், முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்கள் என  இருசாரார்களும்  Islamic banking product களை பயன்படுத்தி கொள்ளலாம்.
இஸ்லாமிய நிதி (Islamic Finance) வரலாறு:
             இத்தொழில் துறை புதிதாக வந்த துறையாக இருந்தாலும், இஸ்லாமிய பொருளாதார கோட்பாடுகள் மற்றும் கொள்கைகள் பல நூற்றாண்டுகளுக்கு முன் உருவாகிவிட்டது. 12வது  நூற்றாண்டின் மத்தியில், பல முஸ்லிம் அறிஞர்கள் ஏற்கனவே இன்று  நடைமுறையில் உள்ளவாறு தாங்கள்  கருத்துகளை வழங்கினார்கள்.
எனினும், சமூக மற்றும் அரசியல் மாற்றங்களால் பல நூற்றாண்டுகளாக நிறுத்தி வைத்த அந்த கருத்துகளை மீண்டும்  முஸ்லிம் கல்வியாளர்கள் மற்றும் அறிஞர்கள் அவற்றை பரிசீலிக்கப்பட்ட பொழுது , அது 20 ஆம் நூற்றாண்டில் வங்கிமுறைகளுக்கு பயன் உள்ளவையாவே இருந்தது. 1970 ம் ஆண்டு  தான்  நவீன இஸ்லாமிய நிதி துறை முதல் முதலாக நடைமுறைக்கு வர தொடங்கியது.

இது எவ்வாறு இயங்குகிறது?
       மற்ற நிதி நிறுவனங்களை போன்று இஸ்லாமிய நிதி மற்றும் வங்கி நிறுவனங்களிடம்
மூலதன சந்தைகள் (capital markets,), நிதி மேலாண்மை (fund managers), முதலீட்டு நிறுவனங்கள் (investment firms), மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள்(insurance companies) அதே போல் தனிநபர் நிதி சேவைகளான  கடன் அட்டைகள் (credit cards), கார் நிதி( car finance), தனிப்பட்ட நிதி ( personal finance), மற்றும் வீட்டு நிதி (home finance) போன்ற தனிப்பட்ட நிதி தயாரிப்புகளை இஸ்லாமிய வங்கி நிறுவனங்கள் வழங்குகிறது.
முன்பு குறிப்பிட்டபடி, இஸ்லாமிய நிதி (Islamic Finance) அடிப்படைக் கொள்கை என்னவென்றால் தடுக்கப்பட்ட வட்டி முறை முற்றிலும் கிடையாது. மாறாக வாடிக்கையாளர் மற்றும் வங்கிகள் அந்த  முதலீட்டால் ஏற்படும்  அபாயங்களை (Risk) பகிர்கிறார்கள். மேலும்  அவற்றால் வரும் இலாபத்தை அவர்களுக்கு இடையே  பிரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஒரு இஸ்லாமிய வங்கி தயாரிப்பு (Islamic banking product) ஐ எடுத்துக்கொண்டால்,  அதில் வட்டி விகிதத்தை விட இலாப விகிதத்தை  பற்றி கணக்கிடவேண்டும்
                          இஸ்லாமிய வங்கி தயாரிப்புகள் (Islamic Banking Product) எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது, இவைகள் அனைத்து ஒரு குறிப்பிட்ட வகையான ஒப்பந்த அடிப்படையை சார்ந்தவையாகவே உள்ளன. 
அந்த ஒப்பந்தமுறைகள் கீழே உள்ள விஷயங்களின் அடிப்படையாக கொண்டது, 
அவைவருமாறு;

Ijara (الإجارة) - குத்தகைக்கு விடுதல்: 
 வங்கி ஒரு பொருளை வாங்கி, பின்னர் ஒரு குறிப்பிட்ட நேர காலத்திற்கு வாடிக்கையாளர்களுக்கு குத்தகையாக விடுவது ஆகும். இதன் அடிப்படையில் தான் கார் கடன், அடமான அல்லது தனிப்பட்ட கடன் இவைகள் இயங்குகிறது.

Ijara-WA-Iqtina (الإجارة والاقتناء)-குத்தகை மற்றும் கையகப்படுத்துதல்: 
வங்கி தன் வாடிக்கையாளர்களுக்கு குத்தகையாக தந்த உருப்படிகளை(கார், வீடு அல்லது மற்றவை) குத்தகை மற்றும் ஒப்பந்த குத்தகை கால இறுதியில் நிர்ணயித்த குத்தகை மற்றும் கொள்முதல் விலையை குத்தகை காலத்தின் இறுதியில் அந்த உருப்படியை (பொருளனை) அந்த வாடிக்கையாளருக்கு தந்துவிடுவதுதான் இந்த ஒப்பந்தம் முறை. 

Bai' al 'inah (sale and buy-back agreement) - விற்பனை மற்றும் வாங்குதல் பின் உடன்பாடு:
 இது Ijarah- WA-Iqtina வையை போன்றது, இதில் வங்கி ஒரு பொருட்களை (உதாரணமாக - வாகனம்) வாங்கி, தவணைமுறையில் அப்பொருளின் மதிப்பை அதிக நிர்ணையித்து வாடிக்கையாளருக்கு விற்பது தான் இந்த முறை.

Mudaraba (المضاربة) : 
இங்கு வங்கி முதலீடு செய்கிறது. முதலீடு பெறப்பட்டு தொழில் செய்ய முனைவோர் தன் உழைப்பே மூலதரமாக வைத்து வங்கியிடன் ஒப்பந்தம் வைத்து தன் தொழிலுக்கு பணம் வாங்குகிறார்.அத்தொழிலில் வரக்கூடிய இலாபங்களை இருசாரரும் பரஸ்பர ஒப்பந்த விகிதத்தில் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் அத்தொழிலில் எற்ப்பட்ட இழப்பு அல்லது நஷ்டம் வங்கியை சார்ந்தது, தொழில்முனைவோர் அவரது உழைப்பு மூலதனமாக இருப்பதால் அவர் உழைப்பையை அவர் இழக்கிறார்.

Murabaha (المرابحة) :
இந்த ஏற்பாட்டில் வங்கி ஒரு பொருளை வாங்கி, பின்னர் ஒரு ஒத்திவைக்கப்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் வாடிக்கையாளருக்கு அதை விற்கப்படுகிறது. இது தனிப்பட்ட கடன்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. வங்கிகள் ஒரு பொருட்கள் அல்லது பங்குகள் வாங்கி, பின்னர் ஒரு இலாப அமைத்து வாடிக்கையாளர்களுக்கு அவற்றை மீண்டும் விற்பனை செய்கிறது.ஆனால் விற்பனை தொகையை திரும்பிக்கிடைக்க சில காலவரைமுறைகளை வங்கி வகுக்கிறது.

வாடிக்கையாளர் தொழில் தொடங்கவேலை murabaha முறையும், மற்றும் தன் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ய (தடவளங்கள், மின்னணு, கணினிகள், மோட்டார் சைக்கிளில் சேவை (திருமண சேவைகள், பயண சேவைகள், மருத்துவ சிகிச்சை, வீட்டை வாடகைக்கு அல்லது கல்வி முதலியவை) அல்லது பொருட்களை வாங்கும் , வீட்டில் சீரமைப்பு போன்றவை) வாங்க ijarah கடன் திட்டத்தை வழங்குகிறது

Istisna (الاستصناع)- உற்பத்தி நிதி:
உற்பத்தி / செயலாக்க / கட்டுமான பணிகளுக்கு பல கட்டங்கள் வாரியாக பணங்களை முதலீடு செய்வதால் தொழிலில் அல்லது கட்டுமானப்பணிகளில் முன்னேற்றத்தை எளிதாக்குகிறது. இங்கு வங்கி ஒரு வியபார பங்குதாரர்களாக இயங்குகிறது. பல தவனைகளாக தன் முதலீட்டில் தருகிறது. இலாப விகிதங்களை ஒப்பந்த அடிப்படையில் நினையிக்கப்படுகிறது.

Musharakah (கூட்டு முயற்சி):
இது ஒரு கூட்டு வணிகம் இதில் இருவரோ அல்லது அதற்கு மேற்பட்டோரோ, முதலீடு செய்து, அதனால் வரக்கூடிய இலாப, நஷ்ட சார்பு விகிதத்தை முன்னே முடிவு செய்வது. இதில் வங்கியும் ஒரு பங்குதாரராக இருப்பது. இவைகள் Realestate வர்த்தகத்திலும், கட்டுமானத்தொழிலும் பயன்படுத்தப்படுகிறது.

Qard ஹஸன் / Qardul ஹஸன்- القرض الحسن 
(நல்ல கடன் / இரக்கமுள்ள கடன்):

 இந்த நல்லெண்ண அடிப்படையில் வங்கி தன் வாடிக்கையாளருக்கு கடன் தரும் அவர் அந்த கடனுக்கான அளவை தவணைமுறையாகவோ, முழுவதுமாகவோ வங்கிக்கு தந்துவிடுவார். எனினும், கடனாளி, அவரது விருப்பப்படி, வங்கியை பாராட்டி கூடுதல் ஒரு தொகை தன் விருப்பத்திற்கு இணங்க பணம் செலுத்துதல், அந்த தொகையை வங்கி அடுத்தவர்களுக்கு கடனாக தர பயன்படுத்தும்.

Hibah (هبة) - நன்கொடை:
இது வாடிக்கையாளர் ஒருவர் இஸ்லாமிய வங்கிகளில் தன் பணத்தை சேமிப்பு கணக்கில் ( Saving Account) வைத்து இருக்கிறார். அவருடைய பணத்தை அந்த வங்கி நிறுவனம் பிறர் தொழிட்களில் பயன்படுத்தி கிடைத்த இலாபத்தில் கிடைத்த சிலவற்றை பணமாகவோ அல்லது பொருட்களோ நன்கொடையாக தருகிறது. இது தான் Hibah ஆகும். இதில் வாடிக்கையாளர் எதையும் எதிர்பார்க்கவில்லை. மேலும் வங்கிகளும் எதையும் முன்பே முடிவுசெய்யவில்லை. இது வட்டிக்கு முற்றிலும் அப்பாற்ப்பட்டது. அந்த பணம் தாமகவே அந்த வாடிக்கையாளரின் கணக்கில் சேர்க்கப்பட்டுவிடும்.

Wadih (الودائع) safekeeping -( நிரந்தர வைப்பு):
வங்கியில் டெபாசிட்டர் ஒருவர் வட்டியில்லாமல் தன்னுடைய கணக்கில் Fixed deposits ஆக வைத்து இருக்கிறார். சில காலங்களில் அவர் அதை திருப்பிப்பெற்றுக்கொளகிறார். அவருடைய பணத்தை வங்கி பயன்படுத்துயதால், அவருக்கு வங்கி சில சமயங்களில் Hidah என்ற அடிப்படையில் நன்கொடைகள் தரும் .

Sukuk (இஸ்லாமிய பத்திரங்கள்) (Financial Bond):
இஸ்லாமிய வங்கி நிறுவனங்கள் தரும் சான்றிதழ்களுக்கு தான் "sukuk " என்று பெயர். எனினும், நிலையான வருமானம், வட்டி உள்ளடக்கிய பத்திரங்கள் இஸ்லாத்தில் அனுமதி கிடையாது.
Sukuk பல்வேறு பெயர்களில் கூறப்படுகிறது. வழக்கமான கடன் பத்திரம் என்றால் அதை கடன் உரிமை சான்றிதழ் (Sukuk Murabaha), சொத்து (Sukuk Al Ijara), திட்ட (Sukuk al Istisna), வணிக (Sukuk al Musharaka), அல்லது முதலீடு (Sukuk al Istithmar) என பல வகையாக பிரிக்கலாம்.

Takaful (அரபு: التكافل) - Insurance காப்பீடு:
தன் உடமையோ, வாகனமோ, நிறுவனமோ போன்ற மற்றவர்களின் பொருட்களுக்கு எதாவது ஆபத்தோ, தீங்கோ வந்தால் பயன்பெறவேண்டி ஒரு சிறிய அல்லது குறைந்தப்பட்ச அளவு வழக்கமான பங்களிப்புகளாக தானம் செய்ய ஒப்பு கொண்ட நிதிஉதவி தான் காப்பீட்டு பணம். அந்த பணத்தை அதனால் பாதித்தவர்களுக்கு பயன்பட செய்வது தான் Takaful என்ற Insurance. இது ஓர் சமுக கூட்டுறவு திட்டம். இது இஸ்லாமிய ஆரம்பம் காலம் நபி(ஸல்)அவர்களின் காலங்கள் முதல் நடைமுறையில் உள்ளது.

இவ்வாறாக இஸ்லாமிய நிதி மற்றும் வங்கி துறைகள் இயங்கி வருகிறது. இதற்காக சட்டங்களையும், நெறிமுறைகளையும் இஸ்லாமிய மார்க்க அறிஞராலும், மார்க்க தீர்ப்பு வழங்க தகுதியான முப்திகளை கொண்டு இஸ்லாமிய நிதி நிறுவனங்கள் நடைப்பெற்றுவருகிறது. அல்ஹம்துலில்லாஹ் முஸ்லிம் நாடுகளில் அரசாங்கம் முன் இருந்து இஸ்லாமிய வங்கிகள் செயல்படுகின்றன. நம் இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் இவைகள் வர நாம் பாடுபடவேண்டும். நம்மால் முடிந்து நம் முஸ்லிம் ஊர்களில் சிறிய அளவில் முயற்சி செய்தால் இன்ஷா அல்லாஹ் இவைகள் முஸ்லிம்களுக்கு மத்தியில் பரவல் ஆகிவிடும். மேலும் வட்டி இல்லாமல் நம் வியபாரங்களையும், வர்த்தகங்களையும் நாம் செய்தால் நம் முயற்சியில் அல்லாஹ்வின் உதவி இருக்கும்.....மேலும் நம் பொருளாதாரம் மேம்படும். இதன் கட்டுரையை பகிருங்கள். இதன் கருத்தை ஆராயுங்கள்.

இங்கணம்
டாக்டர். யூசுப் ஆதம்.
Contact# 00971 55 2340934
dryousufadam@Gmail.com

பின் குறிப்பு:
{இக்கட்டுரை முப்தி தகீ உஸ்மானி (Pakistan முதன்மை நிதிபதி) அவர்களின் புத்தகத்திலிருந்தும், சில இணையதளத்திலுள்ள விஷயங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது)



You may also like

No comments:

Powered by Blogger.