காபா (Kaaba)வை பற்றி அறியவேண்டிய தகவல்கள்

/
0 Comments


காபா (அரபு: الكعبة, kaabah ) :
இது முஸ்லிம்களுக்கு மிக புனிதமான இறை இல்லம் ஆகும். இதை நோக்கியே முஸ்லிம்கள் தொழுகிறார்கள். இதற்கு கிப்லா எனக்கூறப்படுகிறது. இது சவுதி அரேபியா நாட்டில் மெக்கா என்ற புனித நகரத்தில் அமைந்துள்ளது. 
இதில் 
  இதையே அல் மஸ்ஜித் அல் ஹரம் என்பர். முஸ்லிம்களின் அடிப்படை ஐந்து கடமைகளில் ஹஜ் என ஒரு கடமை உண்டு. இதில் முஸ்லிம்கள் மக்காவில் உள்ள அல்லாஹ்வின் இந்த இறை இல்லத்திற்கு புனித பயணம் மேற்க்கொள்வார்கள்.

காபாவின் வரலாறு ( உருவாகிய நாட்களில் இருந்து இன்று வரை):


அறிஞர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் ஆகியோர்களின் கருத்துப்படி 
ஐந்து முதல் 12 வரை இறைஇல்லம் காபா புனரமைக்கப்பட்டது. 

# நபி ஆதம்(அலை) அவர்கள் படைத்து உலகத்திற்கு வருவதற்கு முன்பே மலக்குமார்களால் உருவாக்கப்பட்ட இறையில்லம் தான் இந்த காபா. நபி ஆதம் (அலை) அவர்களும் சிறு மண்மூட்டுகள் போன்று நிர்மானித்தார்கள்

# நபி நுஹ் (அலை) அவர்களின் காலத்தில் ஏற்ப்பட்ட வெள்ளத்தால் சிதைவடைந்த காபாவை நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் தன் மகனார் நபி இஸ்மாயில் (அலை) அவர்களுடன் அல்லாஹ்வின் கட்டளை படி அதை புதிப்பித்து கட்டினார்கள்

# நபி இப்ராஹிம் (அலை) மற்றும் நபி இஸ்மாயில்(அலை) காபாவை மீண்டும் கட்டும் பொழுது, அதன் அளவீடுகள் இவ்வாறாக இருந்தது: 
*கிழக்கு சுவர் 48 அடி 6 இன்ச் -
*ஹத்தீம் பக்கம் உள்ள சுவர் 33 அடி-*ஹஜ்ருல் அஸ்வத் கல்லுக்கும், ருக்குனு எமனி (எமன் மூலை) இடையே உள்ள தூரம் 30 feet -
*மேற்கு சுவர் 46.5 feet.
அன்று முதல் இன்றுவரை அதை நபி இஸ்மாயில் (அலை) அவர்களின் சந்ததியினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதன் பிறகு நபியின் காலங்கள் வரை பல கட்டிடப்புனரமைப்புகள் நடைப்பெற்றது. சரியான வரலாற்று ஆதரங்கள் கிடைக்கவில்லை.

# வரலாற்று ஆய்வாளர் இப்னு இஸ்ஹாக்(ரஹ்) அவர்களின் கூறுப்படி, கி.பி 600 இல் நபி (ஸல்) அவர்களின் நபிப்பட்டம் முன்பு குறைசிகள் காபாவை புதுபித்தப்பொழுது நபி(ஸல்)அவர்களின் ஆலோசனையின் பெயரில் தான் ஹஜ்ருல் அஸ்வத் என்ற கல் காபாவில் எல்லா கோத்திரத்தவர்கள் பங்களித்து வைக்கப்பட்டது. அச்சமயத்தில் குறைசிகளுக்கு இருந்த நிதிப்பற்றாக்குறையின் காரணமாக நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் அமைத்ததைப்போல் அவர்களால் அமைக்க முடியவில்லை. ஹத்தீம் பகுதியை காலியாக விட்டுவிட்டார்கள்.

# பிறகு நபி(ஸல்) அவர்கள், மீண்டும் மக்கா வெற்றியின் போது, நபியின் கட்டளைப்படி காபாவில் உள்ள சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டது அன்று முதல் இப்பொழுது வரை முஷ்ரிக்கள் கையில் காபா சென்று இல்லை.

# கி.பி 683, அப்துல்லா இப்னு ஜுபைர் (ரலி) மக்காவின் பொறுப்பாளராக இருக்கும் இருந்த சமயத்தில் காபாவை புனரமைப்பு செய்தார்.
இப்னு ஜுபைர் (ஹிஜ்ரி 64) இரண்டு வாசலுடன் வாசலை தரையுடன் ஒட்டி, ஒரு ஜன்னலும் வைத்தார்கள்.கட்டடம் (square) வடிவில் இல்லாமல் வேறு மாதிரி கட்டினார்கள் இந்த முறையில் தான் நபி இப்ராஹிம் (அலை) கட்டினார்களாம். இவர் கட்டிய முறைதான் நபி (ஸல்) அவர்களும் விருப்பியதாகவும் காபாவின் வடிவை குறைஷிகள் மாற்றியதாக சில ஹதிஸ்கள் உள்ளது. ஆனால் நபி (ஸல்) தங்களுடைய வாழ்நாளில் அதை மாற்றவில்லை.

# கி.பி 693 ஆண்டு, உமைய்யா மன்னர் அப்துல் மலிக் இப்னு மர்வான் அவர்கள் மீண்டும் இதை மறுபுனரமைப்பு பணியில் ஈடுப்பட்டார். காபாவை முழுவதும் இடிக்காமல் சிறு மாற்றங்களுடன் மறுபடியும் நபி (ஸல்) வாழ்ந்த காலத்தில், இப்போது உள்ளது போல் மாற்றினார். இந்த வடிவம் தான் இன்று வரை உள்ளது.

# கி.பி 952, அப்பாசியாக்கள் காலத்திலும் மன்னர் ஹாரூன் ரஷீத் அவர்கள் காபாவை இடித்து புதிதாக கட்ட எண்ணிணார்கள், இமாம் மாலிக் அவர்களிடம் மன்னர் ஆலோசனை கேட்டார்கள், அதற்கு இமாம் அவர்கள் காபாவின் புனிதத்தை எடுத்துக்கூறி அதை இடிக்கவேண்டாம் என ஆலோசனை கூறினார்கள். பிறகு மன்னர் காபாவை இடிக்காமல் அதை அழகுப்படுத்தினார்கள்

# கி.பி 1629 உதுமானிய மன்னர் நான்காம் முராத் அவர்களின் காலத்தில் ஏற்ப்பட்ட வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த காபாவை இன்று உள்ள அமைப்பாக காட்டினார்
                                          
பிறகு சுமார் 400 வருடங்கள் எந்தவித மாற்றங்கள் செய்யப்படவில்லை. பின்னர் 1996 ஆண்டு காபாவை மறுசீரமைப்பு செய்தார்கள்.



காபாவில் உள்ள இடங்களின் பெயர்கள்:

1. அல் Ħajaru L-Aswad, "Black stone" , காபாவின் கிழக்கு மூலையில் அமைந்துள்ளது. அதன் வடக்கு மூலையில் ருக்குனே ஈராக், அதன் மேற்கு மூலையில் ருக்குனே-ஷாமி , மற்றும் அதன் தெற்கு மூலையில் ருக்குனே-எமனி " என்று அழைக்கப்படுகிறது.
2. நுழைவுவாயில் முகப்பில் 2.13 மீ (7 அடி) உயரம் உள்ள கதவு காபாவின் வடக்கு கிழக்கு சுவரில் அமைக்கப்பட்டு உள்ளது. 1979 ஆம் ஆண்டில் தலைமை கட்டிட கலைஞர் அகமது பின் இப்ராஹிம் பத்ர் மூலம் 300 கிலோ தங்கம் எடை உள்ள தங்கக்கதவு அமைக்கப்பட்டது.
3. Meezab-i Rahmat, தங்கத்தால் செய்யப்பட்ட மழைநீர் நீர்க்குழாய் உள்ளது.
4. நீரோடி (Gutter),அமைக்கப்பட்டு இருக்கிறது.
5. ஹத்தீம், குறைந்த சுவரால் கட்டப்பட்ட காபாவின் ஓர் பகுதி . இது ஒரு அரை வட்ட சுவர் ஆகும், இதற்கும் காபாவிற்கும் இடையே உள்ள இடம் காபாவைச்சார்ந்தவை தான்.
6. Al Multazam, ஹஸ்வது கல்லுக்கும் மற்றும் நுழைவு கதவுக்கும் இடையே உள்ள சுவர் பகுதி.
7. மகாமே இப்ராஹிம். இப்ராஹிம் (அலை) நின்று காபாவை கட்டிய இடம்.
8. ஹஜ்ருல் அஸ்வத் மூலை(கிழக்கு).
9. ஏமன் மூலை ருக்குனு எமன் (தென்மேற்கு).
10.  சிரியா மூலை, ருக்குனு சாம் (வடமேற்கு).
11. ஈராக் மூலை, ருக்குனு ஈராக் (வடகிழக்கு). 
12. Kiswa என்ற சித்திர வேலைப்பாடு கொண்ட காபாவின் உறை. இது ஒவ்வொரு ஹஜ் யாத்திரை போது ஆண்டுதோறும மாற்றப்பட்டு வருகிறது. இது ஒரு கருப்பு பட்டு மற்றும் தங்கத்தால் ஆன திரை. இதில் குர்ஆனின் வசனங்களும், கலிமாவின் எழுத்துகளும் பொறிக்கப்பட்டு இருக்கிறது.
13.ஜிப்ரயில் (அலை) நின்ற இடம்.


காபா திறக்கப்படுதல் மற்றும் சுத்தம் செய்தல்:

ஒவ்வொரு ஆண்டும் இருமுறை திறக்கப்பட்டு பொது நிகழ்ச்சியாக காபாவை சுத்தம் செய்யப்படுகிறது.
இது ரம்ழான் ஆரம்பிக்கப்படுவதின் 30 நாட்கள் முன்பும், புனித ஹஜ் காலங்களுக்கு 30 நாட்கள் முன்பும் இந்நிகழ்ச்சி நடைப்பெறுகிறது. இதற்காக உலகில் உள்ள முக்கிய நபர்களுக்கு அழைப்பு தரப்படுகிறது.

 மக்கா வெற்றி பிறகு நபி(ஸல்)அவர்கள் காபாவின் சாவியை பனு சைஇபா {Banī Shayba (بني شيبة) tribe} குடும்பத்தாரிடம் தந்து காபாவின் பொறுப்பை அந்த குடும்பத்தார்களுக்கு தந்தார்கள். அது இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டுவரப்படுகிறது. அக்குடும்பத்தார்கள் காபாவை திறந்து முக்கிய பிரமுகர்களை வரவேற்ப்பார்கள். 
மக்காவின் கவர்னர் தலைமையில் உலக முஸ்லிம் முக்கிய விருந்தினர்கள் காபாவை சாதாரண துடைப்பங்கள் கொண்டு சுத்தம் செய்த பிறகு ஜம்ஜம் தண்ணீர், ஈரானிய ரோஸ் நீர் இவைகள் கலந்த தண்ணீரில் காபாவை கழுவி சுத்தம் செய்வார்கள்.





காபாவில் உள்பகுதி எவ்வாறு அமைந்துள்ளது?

டாக்டர்.முஜம்மில் சித்திகி, இவர் வட அமெரிக்கா இஸ்லாமிக் சோஷைட்டி - Islamic Society of North America (ISNA)யின் President ஆவார். இவருக்கு October 1998 காபாவிற்கு உள் செல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அவர் காபாவின் உள் அமைப்பை இவ்வாறாக விவரிக்கிறார்,
  • #  இரண்டு தூண்களை கொண்டது(மூன்று என சிலரின் அபிப்பிராயம்)
  • #  ஒரு சிறிய மேஜையில் வாசணைப்பொருட்கள் (perfume) உள்ளது.
  • #  இரண்டு இலாந்தர் விளக்கு உள்ளது, அது மேல் கூரையில் இருந்து தொங்கிவிடப்பட்டு இருக்கிறது.
  • #  50 நபர்கள் அமரக்கூடிய அளவு இடவசதியுடையது.
  • #  உள்பகுதி மின் விளக்குகளால் ஆக்கப்பட்டது கிடையாது
  • #  பளிங்குகற்களால் அதன் சுவருகள் ஆக்கப்பட்டது
  • #  உள்பகுதியில் ஜன்னல்கள் கிடையாது.
  • #  ஒரே ஒரு கதவு மட்டும் உள்ளது.
  • #  சுவர்களின் மேல்பக்கங்களில் கலிமாவின் வாசகங்கள் பொரிக்கப்பட்ட திரைகள் தொங்கவிடப்பட்டுள்ளது.

காபாவின் அளவுகள்:
  • #  தற்போதைய உயரம் 39 அடி, 6 இஞ்ச், இதன் பரப்பளவு சுமார் 627 சதுரஅடிகள்.
  • #  உள் அறையின் பரப்பு 13×9 மீட்டர்கள்.
  • #  காபாவின் சுவர்களின் அகலம் ஒரு மீட்டர்.
  • #  உள் அறையின் தரை, வெளியே தவாப்F செய்யும் தரையை விட 2.2 மீட்டர்கள் உயரமானது.
  • #  மேல் தளம் இரண்டு அடுக்குகளாக மரக்கட்டைகளை வைத்து உருவாக்கப்பட்டது.அத்துடன் துருப்பிடிக்காத வெள்ளியால் கவரப்பட்டது.
  • #  சுவர்கள் பளிங்குகற்களால் ஆனது. உள்புறம் பாலஷ் செய்யப்படவில்லை, வெளிப்புறம் பாலிஷ் செய்யப்பட்டுள்ளது.






கிஸ்வா (Kiswa) துணிப்பற்றி;

காபாவின் மீது போடப்பட்டுள்ள கருப்பு நிறத்திலுள்ள துணிவிற்கு கிஸ்வா (kiswa) எனப்பெயர். இது ஒவ்வொரு ஆண்டும் புதிதாக தயாரித்து மாற்றுவார்கள். இதை மக்காவிலுள்ள கம்பேனியில் உருவாக்குவார்கள்.

இந்த கிஸ்வா துணியின் மதிப்பு சுமார் 17 மில்லியன் சவுதி ரியால் ஆகும். இத்துணி 670கிலோ வெள்ளி சாயம் புசப்பட்ட துணியால் ஆனது. 120கிலோ சுத்த தங்கத்தாலும், 50கிலோ வெள்ளியாலும் அத்துணியின் மீது குர்ஆன் வசனங்கள் பொரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த துணியின் மொத்த சுற்றளவு 658 சதுரமீட்டர்கள்.







நீல் ஆம்ஸ்ட்ராங், என்ற விண்வெளி ஆய்வாளர் மக்காவைப்பற்றிக் இவ்வாறாக கூறியுள்ளார்;
மக்காவானது பூமியின் மையப்பகுதியாகும். இது அறிவியல் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டது. 
விண்வெளி வீரர்கள் விண்வெளி பயணம் போது பூமியை அவர்கள் பார்த்தபொழுது பூமியானது தொங்கிக்கொண்டு இருக்கும் ஒரு இருண்ட கோளம் போன்று பார்த்தார்கள், அது மக்காவை மையமாக வைத்து தொங்கிக்கொண்டு இருந்தது. மேலும் அப்பகுதி மற்ற பகுதியைவிட வெளிச்சத்தில் பிரகாசித்துக்கொண்டு இருந்தது. இவ்வாறு நீல் ஆம்ஸ்ட்ராங் பார்த்ததாக தன் விண்வெளி பயணத்திற்கு பின்னர் கூறினார்.




இதன் விரிவான செய்தி ஆங்கிலத்தில் இவ்வாறு உள்ளது,
Neil Armstrong proved Makkah the
center of the earth.
The centrality of Makkah has been
proved scientifically. When the astronauts traveled to outer
space and took pictures of the earth
they saw that it is dark, hanging
sphere. 

Astonished, Neil Armstrong
said: Earth is a dark hanging sphere,
who hung it? Armstrong was basically trying to say ALLAH is the one who
hung it. They discovered that Earth emits
radiations, and they wrote about this
on the web. They left the item there for
21 days and then they made it
disappear. The disappearance was
intent. The suppression of information here is significant. When they
discovered this radiation they started to
zoom in, they found that it emanates
from Makkah, and to be precise, from
the Kaaba. They found that this
radiation is infinite. When they reached Mars, they began to take pictures, they
found that the radiations continues
beyond. They said this radiation had a
special characteristic.

The Muslim scientists believe that this
radiation is infinite, and it connects the (earthly) Kaaba with the celestial Kaaba. In the middle of the South Pole and the
North Pole there's what is called
magnetic equilibrium zone. If you place
a compass there, the needle won't
move since the pull is equal from both
the sides, and this is why is called Zero Magnetism zone since magnetic force
has no effect there. That's why if someone travels to
Makkah or lives there, he lives longer, is
healthier and is less affect by Earth's
gravity. That is why when you circle the
Kaaba you get charged with energy.













You may also like

No comments:

Powered by Blogger.