ஆது (Aa'd) கூட்டத்தினர் அவர்கள் வாழ்ந்த தடலங்கள்

/
0 Comments





இது சமீபத்தில் சவுதி அரேபியாவில் empty quarter என்ற காலியான   
அரேபிய பாலைவனத்தில் தென்கிழக்கு பகுதியில் தற்போது எரிவாயு சம்மந்தமான வேலைகள் Aramco கம்பேனிகள் மூலம் நடைப்பெறுகிறது. அவர்கள் அவ்விடங்களில் பாலைவனத்தை தோண்டும் சமயம் கண்டு எடுக்கப்பட்ட மனித உடல் எலும்புகள் இவை. இமை ரகசியமாகவே சவுதி அரசாங்கம் வைத்துள்ளது. மார்க்க உலமாக்கள் இது ஆது கூட்டத்தினரின் எலும்பாக இருக்கலாம் என கூறுகிறார்கள்.

ஆது கூட்டத்துனர் அரபி பேசக்கூடிய மக்கள்கள் இவர்கள் அரேபிய தீபகற்பத்தில் தென் பகுதியில் வாழ்த்து வந்த கூட்டத்தினர். அல்லாஹ் இவர்களுக்கு ஹூது (அலை) அவர்களை நபியாக ஆக்கினன், இவர்கள் அவர்களை பொய்யாக்கினர்கள். ஆது கூட்டத்தினரை பலசாலியாகவும், உயரகமாகவும் அல்லாஹ் படைத்தான், அவர்கள் நபியை பொய்ப்படுத்தினர் மற்றும் பல சிலைகளை கடவுளாக வணங்கினார்கள். அல்லாஹ் அவர்களை வேரோடு அழித்தான். 

அல்லாஹ் குர்ஆனில் ஸூரத்துல் அஃராஃப்(சிகரங்கள்) ஆது கூட்டத்துனரை பற்றி பின்வருமாறு கூறுகிறான்.

7:65. இன்னும், ஆது கூட்டத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை (நபியாக அனுப்பி வைத்தோம்;) அவர், “என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனையன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை - நீங்கள் (அவனுக்கு) அஞ்சி(ப் பேணி) நடக்க வேண்டாமா?” என்று கேட்டார்.ِ

7:66. அவருடைய சமூகத்தாரில் நிராகரித்தவர்களின் தலைவர்கள், (அவரை நோக்கி) “நிச்சயமாக நாங்கள் உம்மை மடமையில் (மூழ்கிக்கிடப்பவராகவே) காண்கின்றோம்; மேலும் நிச்சயமாக நாம் உம்மைப் பொய்யர்களில் ஒருவராகக் கருதுகிறோம்” என்று கூறினார்கள்.
َ
7:67. அதற்கு அவர்? “என் சமூகத்தாரே! எந்த மடமையும் என்னிடம் இல்லை - மாறாக, அகிலங்களின் இறைவனாகிய - (அல்லாஹ்வின்) தூதன் ஆவேன்” என்று கூறினார்.
ٌ
7:68. “நான் என் இறைவனுடைய தூதையே உங்களிடம் எடுத்துக் கூறுகின்றேன். மேலும் நான் உங்களுக்கு நம்பிக்கையான உபதேசியாகவும் இருக்கின்றேன்” (என்று கூறினார்).

7:69. “உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உங்களிலுள்ள ஒரு மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனை வந்துள்ளது பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? நூஹுடைய சமூகத்தாருக்குப் பின்னர் அவன் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக்கி வைத்து, உங்கள் உடலில் பலத்தையும் அதிக மாக்கியதை நினைவு கூறுங்கள் - எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை எல்லாம் நினைத்துப் பாருங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” (என்றும் கூறினார்).

7:70. அதற்கு அவர்கள் “ எங்கள் மூதாதையர்கள் வழிபட்ட தெய்வங்களை விட்டு விட்டு; அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்பதற்காகவா நீர் எங்களிடம் வந்திருக்கிறீர்? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் அச்சுறுத்துவதை எம்மிடம் கொண்டுவாரும்” என்று கூறினார்கள்.

7:71. அதற்கு அவர், “உங்களுடைய இறைவனின் கோபமும், வேதனையும் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டன; அல்லாஹ் எந்தவோர் ஆதாரத்தையும் இறக்கி வைக்காத நீங்களும் உங்களுடைய முன்னோர்களும் பெயர் சூட்டிக் கொண்டீர்களே அந்த பெயர்கள் விஷயத்திலேயா என்னிடத்திலே நீங்கள் தர்க்கம் செய்கிறீர்கள்; (எனவே உங்கள் வேதனையை) நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் உங்களோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.
َ
7:72. ஆகவே, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும், நம்முடைய அருளைக்கொண்டு காப்பற்றினோம்; நம் வசனங்களைப் பொய்யெனக்கூறி, நம்பிக்கை கொள்ளாமல் இருந்தவர்களை நாம் வேரறுத்து விட்டோம்.



You may also like

No comments:

Powered by Blogger.