இஸ்லாமிய வரலாறு சார்ந்த கேள்வி&பதில் - Islamic History 01

/
0 Comments
ஐந்து கேள்விகள்; பத்து பதில்கள் - 01
--------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இது ஓர் வித்தியாசமான இஸ்லாமிய புதிர்..,

1. எகிப்து மக்களை பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறும் சமயம் இரு பெண்மணிகளை பற்றி சிறப்பித்து கூறி எகிப்தியர்களை கண்ணியப்படுத்தினார்கள். யார் அந்த இரு பெண்மணிகள்?

2. இரு நபிதோழர்கள் அவ்விருவரும் இஸ்லாத்திற்கு வரும் முன்பு முஸ்லிம்களை அழிக்கபடுப்பட்டார்கள், ஆனால் இஸ்லாம் தழுவியப்பின் இஸ்லாத்திற்காக பாடுபட்டார்கள், மேலும் இஸ்லாமிய சாம்பிராஜ்யத்தின் எல்லையை வளர்த்தார்கள்? அந்த இரு நபிதோழர்கள் யார்?

3, இரு நபிதோழர்கள் வாழ்க்கையில் எளிமையை தேர்ந்தேடுத்தவர்கள், நபி(ஸல்) அவர்கள் இவ்விரு ஸஹாபிகளின் எதிர்கால விஷ௰ங்களை பற்றி முன்னறிவிப்பு செய்துள்ளார்கள், ஹிஜ்ரத் முன்பே இஸ்லாத்தை ஏற்றவர்கள், ஒன்றாகவே சில நாட்கள் இருந்தவர்கள் அவ்விருவர் யார்?? ஒருவர் குறைசி, மற்றவர் குறைசிகளை சார்ந்தவரில்லை.

4. இருவர், சகோதரர்கள், இருவரும் அல்லாஹ்வின் நபிகள், இருவரும் தங்களுக்கிடையே சந்திக்கவில்லை. இருவரின் சந்ததிகளை அல்லாஹ் புகழின் உச்சிவரை அல்லாஹ் வைத்தான். இருவர்களும் பேசும் மொழிகள் வெவ்வேறு. அந்த இரு நபிமார்கள் யார் யார்??

5. இரு பெண்மணிகள், இருவரையும் எந்த ஆண்கள் தீண்டவில்லை. இருவரும் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்கள், இருவரும் முக்கிய ரசூல்மார்களுடன் வாழ்ந்த பெண்மணிகள். நபி(ஸல்)அவர்களுடன் ஒருவிசயத்தில் தொடர்பு உடையவர்கள். யார் அந்த பெண்மணிகள்?

குறிப்பு: ஒவ்வொரு கேள்வி உள்ள ஒவ்வொரு வரலாற்று தகவல்களும், நிகழ்வுகளும் அடங்கியுள்ளது. பின்னர் இதன் பதில்களை வரலாற்று விளக்கத்துடன் வெளியிடப்படும்.


பதில்கள்:

1. எகிப்து மக்களை பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறும் சமயம் இரு பெண்மணிகளை பற்றி சிறப்பித்து கூறி எகிப்தியர்களை கண்ணியப்படுத்தினார்கள். யார் அந்த இரு பெண்மணிகள்?

விடை: அன்னை ஹாஜிரா (அலை),
முஃமீன்களின் அன்னை மரியா அல்கிப்த்தியா (நபி அவர்களின் மனைவி)

# அரபிகளின் அன்னையாகவும், இஸ்மாயில்(அலை) அவர்களின் அன்னையும் ஆன ஹாஜிரா (அலை) அவர்கள் எகிப்தின் கிப்தி இனத்தை சார்ந்தவர்கள்.
# எகிப்திய மன்னன் ALMUKAWKES , நபி அவர்களுக்கு அன்பளிப்பாக தந்த பெண்மணி தான் மரியா அல்கிப்த்தியா, இவர்கள் மூலம் நபியவர்கள் இபுராஹிம் என்ற மகனை பெற்றார்கள். அந்த குழந்தை இரண்டு வயதில் இருந்த சமயம் மரணமடைந்து விட்டது, அச்சமயம் நபியவர்கள் மிகவும் கவலைப்பட்டார்கள். நபி(ஸல்) மரியா(ரலி) அவர்கள் மீதும், மகன் இபுராஹிம் மீதும் அதிக பாசமாக இருந்தார்கள்.

இந்த இரு பெண்களின் பிறப்பு, எகிப்தை சார்ந்ததாக இருந்தது. இரு பெண்களும் கிப்தி இனத்தை சார்ந்தவர்கள். இந்த விஷயத்தின் அடிப்படையிலேயே நபி(ஸல்) அவர்கள் எகிப்து மக்களை கண்ணியப்படுத்தினார்கள்.


2. இரு நபிதோழர்கள் அவ்விருவரும் இஸ்லாத்திற்கு வரும் முன்பு முஸ்லிம்களை அழிக்கபடுப்பட்டார்கள், ஆனால் இஸ்லாம் தழுவியப்பின் இஸ்லாத்திற்காக பாடுபட்டார்கள், மேலும் இஸ்லாமிய சாம்பிராஜ்யத்தின் எல்லையை வளர்த்தார்கள்? அந்த இரு நபிதோழர்கள் யார்?

பதில்கள்:
1. காலித் இப்னு வலீத் (ரலி),
2. அம்ரு இப்னு ஆஸ் (ரலி).

விளக்கம்:
இருவரும் குரைஷிகளின் செல்வாக்குமிக்க தலைவர்கள். இஸ்லாத்தை ஏற்க்கும் முன்பு இருவரும் முஸ்லிம்களை அழிக்கப்பாடுபட்டார்கள்.
உஹது போரில் முஸ்லிம்களில் அதிகமானோர் மரணம்(ஷஹீத்)அடைய காலித இப்னு வலீத்(ரலி) முக்கிய காரணமானவர்.
முஸ்லிம்கள் அபிசினிய ஹிஜ்ரத் சமயம் முஸ்லிம்களை மீண்டும் மக்காவிற்கு இழைத்து வர மக்கா குரைசிகளின் சார்பில் நஜ்ஜாஜ் மன்னருடன் தந்திரமாக பேச அம்ரு இப்னு ஆஸ் அவர்களை தான் மக்கா காபிர்கள் அனுப்பிவைத்தார்கள். முஸ்லிம்களை அழிக்க அதிககாலம் பாடுபட்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ், ஹுதைபியா உடன்படிக்கை பின், மக்காவிற்கு சில மாதங்கள் முன் இருவரும் ஒன்றாக நபி(ஸல்)அவர்கள் முன் வந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்.
பின்னர் இருவரின் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக பங்காற்றியது ஏராளம். அதை பட்டியலிட ஒரு தனி கட்டுரை வேண்டும்.


3, இரு நபிதோழர்கள் வாழ்க்கையில் எளிமையை தேர்ந்தேடுத்தவர்கள், நபி(ஸல்) அவர்கள் இவ்விரு ஸஹாபிகளின் எதிர்கால விஷ௰ங்களை பற்றி முன்னறிவிப்பு செய்துள்ளார்கள், ஹிஜ்ரத் முன்பே இஸ்லாத்தை ஏற்றவர்கள், ஒன்றாகவே சில நாட்கள் இருந்தவர்கள் அவ்விருவர் யார்?? ஒருவர் குறைசி, மற்றவர் குறைசிகளை சார்ந்தவரில்லை.

பதில்கள்:
1.அலி(ரலி) அவர்கள்
2.அபூதர் அல் கிபாFரி (ரலி) அவர்கள்.

விளக்கம்:
இவ்விருவரும் எளிமையான வாழ்க்கையை தேர்வு செய்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தன் நபிப்பட்டம் முன் காபத்துல்லாஹ்வில் தவாப் செய்துக்கொண்டு இருக்கும் சமயத்தில் தான் அலி(ரலி) அவர்கள் காபாவில் பிறந்தார்கள். பின்னர் நபி(ஸல்)அவர்கள் குழந்தை அலி(ரலி)அவர்களை தன் கையால் முதலாவதாக குளிப்பாட்டினார்கள். பின்னர் இவ்வாறு முன்னறிவிப்பு செய்தார்கள். அதாவது அலி(ரலி) அவர்கள் தன்னை கடைசியாக குளிப்பாட்டுவார்கள் பின்னர் அலி(ரலி)அவர்களின் பார்வை குறையும் என முன்னறிப்பு செய்தார்.அப்படியே நடந்தது.

அபூதர் அல்கிபாFரி(ரலி) அவர்கள் குறைசி குடும்பத்தை சார்ந்தவர் அல்ல, அல் கிபாFரி குடும்பத்தை சார்ந்தவர். இவர்கள் அறிஞர், இஸ்லாத்திற்கு மிக அதிக எதிர்ப்பு இருந்த சமயத்தில், முஸ்லிம்களுக்கு காபிர்கள் தொல்லைகள் செய்த சமயத்தில் இஸ்லாத்தை பற்றி தெரிந்துக்கொள்வதற்காக மக்கா வந்தார்கள், அச்சமயம் இவர்கள் சில நாட்கள் அலி (ரலி) வீட்டில் தங்கினார்கள், பின் அலி(ரலி)அவர்களின் துணையுடன் நபி(ஸல்)அவர்களை சந்தித்து அச்சமயத்திலேயே முஸ்லிம் ஆனார்கள்.உடனே அவர்களின் உள்ளத்தில் உருவான ஈமானின் பலத்தால் காபாவிற்கு சென்று கலிமாவை உரத்தகுரலில் மொழிந்தார்கள்.காபிர்கள் அவரை கல்லால் தாக்கினார்கள். பிறகு ஓர் சமயத்தில் அவர்களை பற்றி நபி(ஸல்) ஒர் முன்னறிப்பு செய்தார்கள். அதாவது முஸ்லிம்கள் இஸ்லாம் மேலோங்கி இருக்கும் காலங்களில் உங்களால் பகிரங்கமாக சுதந்திரமாக தீனுடைய அமல்கள் செய்யமுடியாது என முன்னறிவிப்பு செய்தார்கள். அவ்வாறே உஸ்மான் ஆட்சிகாலத்தில் நபிதோழர் அபூதர் அல்கிபாFரி(ரலி) அவர்கள் நாடுகடத்தப்பட்டார்கள் பல ஆண்டுகள் தனியாகவே தன் வாழ்க்கை வாழ்த்து மரணித்தார்கள். அவர்களும் அந்த நாடுகடத்தலை நபியின் முன்னறிப்புபடி நடந்தன என மனமகிழ்வுடன் ஏற்றார்கள்.


4.இருவர், சகோதரர்கள், இருவரும் அல்லாஹ்வின் நபிகள், இருவரும் தங்களுக்கிடையே சந்திக்கவில்லை. இருவரின் சந்ததிகளை அல்லாஹ் புகழின் உச்சிவரை அல்லாஹ் வைத்தான். இருவர்களும் பேசும் மொழிகள் வெவ்வேறு. அந்த இரு நபிமார்கள் யார் யார்??

பதில்கள்;
1.இஸ்மாயில் (அலை)
2. இஷ்ஹாக் (அலை)

நபி இஸ்மாயில் (அலை) பிறந்து, சில மாதங்களிலேயே அல்லாஹ்வின் கட்டளைப்படி ஹாஜிரா(அலை)அவர்களையும், இஸ்மாயில்(அலை) அவர்களையும் மக்காவில் பாலைவணத்தில் விட்டுவிட்டு வந்ததுவிட்டார். இஸ்மாயில் (அலை) அவர்கள் அரபிக்குலத்தாருடன் மணமுடித்தார்கள் அவர்கள் அந்த அரபியர்களிடம் இருந்து அரபி மொழியை கற்றார்கள். இபுராஹிம் (அலை) அவர்கள் நான்குமுறை மட்டும் தான் மகன் இஸ்மாயில்(அலை)அவர்களை பார்க்க சென்றுள்ளார்கள்.
பிறகு பல வருடங்கள் கழித்து இஸ்ஹாக் (அலை) பிறந்தார்கள். அவர்கள் இஸ்மாயில் (அலை) அவர்கள் சந்திக்கவில்லை. அவர்கள் பாலஸதீனத்தில் வாழ்ந்தார்கள்.அவர்களுக்கு அரபி மொழி தெரியாது


5. இரு பெண்மணிகள், இருவரையும் எந்த ஆண்கள் தீண்டவில்லை. இருவரும் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்கள், இருவரும் முக்கிய ரசூல்மார்களுடன் வாழ்ந்த பெண்மணிகள். நபி(ஸல்)அவர்களுடன் ஒருவிசயத்தில் தொடர்பு உடையவர்கள். யார் அந்த பெண்மணிகள்?

பதில்கள்:
1.அன்னை ஆசியா(அலை) - பிர்அவ்ன் மனைவி
2. அன்னை மரியம்(அலை)

விளக்கம்:
இந்த இரு பெண்களை எந்த ஆணும் திண்டவில்லை. அமரியம்(அலை) கன்னிப்பெண் எல்லாரும் அறிவார்கள். பிர்அவ்ன் மனைவி அன்னை ஆசியா (அலை), அல்லாஹ்விடம் இருந்து பிர்அவ்ன தன்னை திண்டாமல் இருக்க துஆ செய்ததால், பிர்அவ்னால் அவர்களை திண்டமுடியவில்லை. இருவரும் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்கள். மரியம் (அலை) ரசூல் ஈஸா (அலை) வின் தாயார். அன்னை ஆசியா(அலை) அவர்கள் ரசூல் முஸா (அலை)மின் வளர்ப்பு தாயார். நபி(ஸல்) அவர்கள் இவ்விரு பெண்களை பற்றி சிறப்பித்து பல அறிவிப்புகள் கூறியுள்ளார்.



You may also like

No comments:

Powered by Blogger.