ஐந்து கேள்விகள் பத்து பதில்கள் - 02

/
0 Comments

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

இந்த ஐந்து கேள்விகள், பத்து பதில்கள், இது ஓர் சிறப்பு நிகழ்ச்சி, இதில் பல இஸ்லாமிய வரலாற்று நிகழ்வுகளை மறைத்துள்ளது. இதில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையும் தன்னுள் ஓர் வரலாறு வைத்துள்ளது. கேள்விகளில் இருந்து உண்மை வரலாற்று நிகழ்வுகளை அறியவேண்டும் என்பதற்காகவே இவை இங்கு பதியப்படுகிறது.

கேள்விகள்:

(1) , இருவர் நபிதோழர்கள் ஒரே ஆண்டில் முஸ்லிம் ஆனார்கள், ஒருவர் வில் எறிவதில் வீரர், மற்றொருவர் வால் சுழற்றுவதில் வல்லவர். இருவரும் குறைசி குலத்தை சார்ந்தவர்கள். ஒருவர் நபி(ஸல்)அவர்களுக்கு நெருங்கிய உறவினர். இருவரும் பகிரங்கமாக ஹிஜ்ரத் செய்தார்கள், ஒருவர் நபி(ஸல்) இறப்பதற்கு முன் மரணித்தார், மற்றொருவர் நபி(ஸல்)அவர்களுக்கு பின் மரணித்தார். அந்த இரு நபிதோழர்கள் யார் யார்?

(2), இரு அறிஞர்கள், இருவரும் நபி(ஸல்)அவர்கள் வாழ்ந்த காலத்திற்கு முன்பு வாழ்ந்தவர்கள், இருவர்களின் பெயரை கேட்கும் சமயம் நாம் அவர்களுக்கு ஸலாம் கூறுவோம், ஆனால் இருவரும் நபி அல்ல. ஒருவர் பனு இஸ்ராயில் நபிமார்களுடன் தொடர்பு உடையவர், மற்றவர் அரசாட்சியை விட கல்வி ஞானத்தை தேர்ந்தேடுத்தவர். இருவர்களை பற்றி திருகுர்ஆனில் கூறப்பட்டுள்ளது அந்த இரு அறிஞர்கள் யார் யார்?

(3), இருவர்கள் அறுக்கப்படவேண்டியவர்கள், ஆனால் அறுக்கப்படவில்லை அவர்களுக்கு பகரமாக பிராணிகள் அறுக்கப்பட்டது. அவ்விருவர்களும் நபி(ஸல்)அவர்களுடன் தொடர்புள்ளவர்கள். இருவரும் ஸஹாபிகள் கிடையாது. இருவரும் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்தவர்கள். அவ்விருவரும் நபி(ஸல்)அவர்கள் முன் மரணமடைந்துவிட்டர்கள் அந்த இருவர் யார் யார்?

(4), இரண்டு இமாம்கள்(அறிஞர்கள்) இருவரும் ஹிஜ்ரி 100விற்கு பின் பிறந்தவர்கள், ஒருவர் அன்சாரி ஸஹாபி அவர்களின் வமிசத்தில் வந்தவர், மற்றவர் ஈராக் பிரதேசத்தில் பிறந்தவர்கள். இருவரும் இரு முக்கிய இமாம்களின் மாணவர்கள். ஆனால் ஒரு இமாமின் சட்டத்திட்டத்தையே(FIQH) உலகுக்கு பரப்பினார்கள், இருவரில் ஒருவரிடம் ஒரு முக்கிய இமாம் அவர்கள் சில விசயங்களை கற்றார்கள்; மற்றவர்களிடம் மற்றொரு முக்கிய இமாம் மார்க்க விசயங்களை கற்றார்கள். இருவரும் அப்பாஸி மன்னர் ஹாருன் அல்ரஷித் அவர்களால் காஜி(நிதிபதி)யாக நியமிக்கப்பட்டார்கள். அந்த இரு இமாம்கள்(அறிஞர்கள்) யார் யார், அவர்களின் பெயர்கள் என்ன?
(முக்கிய இமாம்கள் என்பது நான்கு முக்கிய சட்டநுனுக்கங்கள்(Fiqh) கலையை தொகுத்தவர்கள்)

(5), இரு நபர்கள், ஒருவர் பனு இஸ்ராயில் சமுதாயத்தின் மிக முக்கியமான நபி ஆவர், மற்றவர் அல்லாஹ்வின் நபி அல்ல. அல்லாஹ்வின் கட்டளை படி இருவரும் பல ஆண்டுகள் பயணம் செய்து ஒரு அறிஞரை பார்க்க சென்றார்கள். அந்த அறிஞரும் நபி அல்ல, அந்த அறிஞரை சந்தித்த அந்த நபிக்கு பல தர்பித்துகள் கிடைத்தது. இந்த சம்பவம் திரு குர்ஆனில் செல்லப்பட்டு இருக்கிறது. அறிஞரும் பனு இஸ்ராயில் சமுகத்தை சார்ந்தவரல்ல. யார் அந்த இரு நபர், அவ்வருவர்களின் பெயர் என்ன?

பதில்கள்:

(1), இருவர் நபிதோழர்கள் ஒரே ஆண்டில் முஸ்லிம் ஆனார்கள், ஒருவர் வில் எறிவதில் வீரர், மற்றொருவர் வால் சுழற்றுவதில் வல்லவர். இருவரும் குறைசி குலத்தை சார்ந்தவர்கள். ஒருவர் நபி(ஸல்)அவர்களுக்கு நெருங்கிய உறவினர். இருவரும் பகிரங்கமாக ஹிஜ்ரத் செய்தார்கள், ஒருவர் நபி(ஸல்) இறப்பதற்கு முன் மரணித்தார், மற்றொருவர் நபி(ஸல்)அவர்களுக்கு பின் மரணித்தார். அந்த இரு நபிதோழர்கள் யார் யார்?

பதில்கள்:
1, ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலீப்(ரழி)
2, உமர் இப்னு ஹத்தாப் (ரழி)

நபி(ஸல்) அவர்களுக்கு நபிப்பட்டம் கிடைத்த சில ஆண்டுகள் நபி அவர்கள் இரகசியமாகவே இஸ்லாமிய பிரச்சாரப்பணி செய்து வந்தார்கள். பல எதிர்ப்புகள், பிரச்சனைகள் மத்தியில் அல்லாஹ் காட்டிய இறைப்பணி செய்தார்கள்.

நபிப்பட்டம் கிடைத்த 6-ம் ஆண்டு உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள். அந்த வருடமே நபி(ஸல்)அவர்களின் சிறிய தந்தை ஹம்ஸா (ரலி) அவர்களும் இஸ்லாத்தை ஏற்றார்கள். வாளுக்கு உமர் ரழி என்றால், வில்லுக்கு ஹம்ஸா ரழி அவர்கள்.

இருவரும் இஸ்லாம் ஏற்றபிறகு தான் பகிரங்கமாக முஸ்லிம்கள் இரு வரிசையாக காபாவிற்கு சென்று தொழுதார்கள். ஒரு வரிசை முன் உமர் ரலி வும்., மற்றொன்றுக்கு ஹம்ஸா ரலி யும் இருந்தார்கள். உஹது யுத்தத்தில் ஹம்ஸா (ரழி) அவர்கள் வீரமரணமடைந்தார். உமர் (ரழி)அவர்கள் பிற்காலத்தில் கலிபாவாக ஆனார்கள்.

(2) இரு அறிஞர்கள், இருவரும் நபி(ஸல்)அவர்கள் வாழ்ந்த காலத்திற்கு முன்பு வாழ்ந்தவர்கள், இருவர்களின் பெயரை கேட்கும் சமயம் நாம் அவர்களுக்கு ஸலாம் கூறுவோம், ஆனால் இருவரும் நபி அல்ல. ஒருவர் பனு இஸ்ராயில் நபிமார்களுடன் தொடர்பு உடையவர், மற்றவர் அரசாட்சியை விட கல்வி ஞானத்தை தேர்ந்தேடுத்தவர். இருவர்களை பற்றி திருகுர்ஆனில் கூறப்பட்டுள்ளது அந்த இரு அறிஞர்கள் யார் யார்?

பதில்கள்:
1, கிள்ரு (அலை),
2, லுக்மான் (அலை),

விளக்கம்:
"சூரா காஃப்F" வில் அல்லாஹ் கிள்ரு(அலை) அவர்களை பற்றி கூறுகிறான். இவர் அல்லாஹ்வின் ஞானம் பெற்றவர். இவர் நபியாக அனுப்பபடவில்லை. இவர்களிடம் பனு இஸ்ராயில் நபியாக முஸா (அலை) அவர்களை தர்பியத்திற்காக அனுப்பிவைத்தான்.
அடுத்ததாக, "சூரா லுக்மான்" என்ற சூராவில் ஹக்கீம் லுக்மான் (அலை) அவர்களை பற்றி அல்லாஹ் கூறுகிறான். இவர் அரசாட்சி கிடைப்பதை விட கல்வி ஞானத்தை தேர்ந்ததேடுத்தார்கள். இவர்கள் தன் மகனுக்கு செய்யும் அறிவுரையே அல்லாஹ் இந்த சூராவில் கூறுகிறான். அது முழு மனித குலத்திற்கே பொருந்தக்கூடியது.

(3), இருவர்கள் அறுக்கப்படவேண்டியவர்கள், ஆனால் அறுக்கப்படவில்லை அவர்களுக்கு பகரமாக பிராணிகள் அறுக்கப்பட்டது. அவ்விருவர்களும் நபி(ஸல்)அவர்களுடன் தொடர்புள்ளவர்கள். இருவரும் ஸஹாபிகள் கிடையாது. இருவரும் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்தவர்கள். அவ்விருவரும் நபி(ஸல்)அவர்கள் முன் மரணமடைந்துவிட்டர்கள் அந்த இருவர் யார் யார்?

பதில்கள்:
1, நபி இஸ்மாயில்(அலை) அவர்கள்,
2, அப்துல்லா இப்னு அப்துல் முத்தலீப் ( நபி(ஸல்) அவர்கள் தந்தை)

விளக்கம்:
அனைவரும் அறிந்ததே நபி இப்ராஹிம் (அலை) அவர்கள, தன் மகன் நபி இஸ்மாயில் (அலை) அவர்கள் பலியிட அல்லாஹ் கட்டளையிட்டதை, அவ்விருவரும் தியாகத்திற்கு தயாராகிவிட்டார்கள். பின்னர் அல்லாஹ் அவர்களின் தியாகத்தை ஏற்றுக்கொண்டு அவ்விடத்தில் ஆட்டை குர்பானி செய்தார்கள். அதையே நாம் தியாகப்பெருநாளாக நினைவு கூறுகிறோம்.

நபி(ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன் நபியின் பாட்டனார் அப்துல் முத்தலீப் ஒரு முக்கிய காரியங்களுக்காக தன் மகன்களில் ஒருவரை பலியிட நேர்ச்சை செய்து இருந்தார்கள். அவ்விதமே நேர்ச்சையை செய்ய முடிவு செய்து காபாவில் தன் மகன்களுடன் ஒன்று கூடி சீட்டு போட்டு பார்த்ததில் நபியின் தந்தை அப்துல்லாவின் பெயர் வந்தது. அது சமயம் அப்துல்லா அவர்கள் எல்லாரின் பாசத்தையும், அன்பையும் பெற்று இருந்தார்கள். பல ஆலோசனைகளின் பெயரில் கடைசியாக நூறு ஒட்டகம் பலியிட்டு அப்துல் முத்தலீப் தன் நேர்ச்சையை பூர்த்தி செய்தார்.

(4), இரண்டு இமாம்கள்(அறிஞர்கள்) இருவரும் ஹிஜ்ரி 100விற்கு பின் பிறந்தவர்கள், ஒருவர் அன்சாரி ஸஹாபி அவர்களின் வமிசத்தில் வந்தவர், மற்றவர் ஈராக் பிரதேசத்தில் பிறந்தவர்கள். இருவரும் இரு முக்கிய இமாம்களின் மாணவர்கள். ஆனால் ஒரு இமாமின் சட்டத்திட்டத்தையே(FIQH) உலகுக்கு பரப்பினார்கள், இருவரில் ஒருவரிடம் ஒரு முக்கிய இமாம் அவர்கள் சில விசயங்களை கற்றார்கள்; மற்றவர்களிடம் மற்றொரு முக்கிய இமாம் மார்க்க விசயங்களை கற்றார்கள். இருவரும் அப்பாஸி மன்னர் ஹாருன் அல்ரஷித் அவர்களால் காஜி(நிதிபதி)யாக நியமிக்கப்பட்டார்கள். அந்த இரு இமாம்கள்(அறிஞர்கள்) யார் யார், அவர்களின் பெயர்கள் என்ன?
(முக்கிய இமாம்கள் என்பது நான்கு முக்கிய சட்டநுனுக்கங்களை(Fiqh) தொகுத்தவர்கள்)

பதில்கள்:
1, இமாம் அபு யூசுப்
(ஹி 113 - ஹி 182)

2, இமாம் முஹம்மது
 (ஹி135-ஹி 189)

இருவரும் இமாம் அபுஹனிபா(ரஹ்) அவர்களின் மாணவர்கள், இருவரும் இமாம் மாலிக்(ரஹ்) அவர்களிடமிருந்து ஹதிஸ் அல் முஹத்தா கிரந்தத்தை படித்தார்கள்.

இமாம் அபுயூசுப் அவர்கள் அன்சாரி ஸஹாபி ஸஹது(ரழி)அவர்களின் வமிசவழியில் வந்தவர்கள். இவர்களிடம் இமாம் அஹமது இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள் இவர்களிடம் சில காலம் கல்வி கற்றார்கள்.

இமாம் முஹம்மது, இவர்கள் ஈராக் நாட்டில் பிறந்தார்கள், இவர்களிடம் இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் மார்க்ககல்வியை கற்றார்கள்.

இருவரும் இமாம் அபுஹனிபா (ரஹ்) அவர்களின் பிக்ஹ் சட்டங்களை பின்பற்றினார்கள்.

இருவரும் வெவ்வேறு சூழ்நிலையில் மன்னர் ஹாருன் அல்ரஷீத் அவர்களின் தலைமை காஜி-நிதிபதியாக இருந்தார்கள்.

This information has been obtained and adapted from the english translation of "Sirat-i-Numan" by Allamah Shibli Nu'mani translated by M. Hadi Hussain.

(5), இரு நபர்கள், ஒருவர் பனு இஸ்ராயில் சமுதாயத்தின் மிக முக்கியமான நபி ஆவர், மற்றவர் அல்லாஹ்வின் நபி அல்ல. அல்லாஹ்வின் கட்டளை படி இருவரும் பல ஆண்டுகள் பயணம் செய்து ஒரு அறிஞரை பார்க்க சென்றார்கள். அந்த அறிஞரும் நபி அல்ல, அந்த அறிஞரை சந்தித்த அந்த நபிக்கு பல தர்பித்துகள் கிடைத்தது. இந்த சம்பவம் திரு குர்ஆனில் செல்லப்பட்டு இருக்கிறது. அறிஞரும் பனு இஸ்ராயில் சமுகத்தை சார்ந்தவரல்ல. யார் அந்த இரு நபர், அவ்வருவர்களின் பெயர் என்ன?
( பின்குறிப்பு: அறிஞர் பெயர் என்வென்று தேவை என்றால் Commentல் செல்லப்படும்)

பதில்கள்
1, நபி முஸா (அலை)
2, அவர்களின் பணியாள் யூஷவு இப்னு நூன்

விளக்கம்:
இக்கேள்வி "சூரா காஃப்F" அத்தியாயத்தில் நபி முஸா (அலை) அவர்கள், கிள்ரு(அலை) அவர்களை அல்லாஹ்வின் கட்டளைப்படி சென்றது அடிப்படையில் கேட்கப்பட்டது. நபி முஸா (அலை) அவர்களுடன் அவர்களின் பணியாள் யூஷவு இப்னு நூன் அவர்கள் சென்றார்கள். அவர்கள் பல மைல்கள் தூரம் சென்றதாக சில அறிவிப்புகள் கூறுகிறது. Morocco நாட்டிலுள்ள இரு கடல்கள் சேருமிடத்திற்கு சென்றதாக சில இஸ்லாமிய வரலாற்று நூற்களில் காணப்படுகிறது.

You may also like

No comments:

Powered by Blogger.