என் முன்னோர்கள் பற்றி ( About My forefathers)...

/
4 Comments

என் ஊர் லால்பேட்டை உருவாக சில ஆண்டுகளுக்கு முன் ஆற்காடு நாவபின் படையில் ஒர் பிரிவில் தளபதியாக ஆப்கன் நாட்டின் உயர் குலமான "ஷா" குலத்தை சார்ந்த கரீம் ஷா என்பவர் ஆற்காடு நவாபின் படைப்பிரிவின் ஒன்றில் படைத்தளபதியாக இருந்தார். அக்காலக்கட்டத்தில் தஞ்சையை சார்ந்த ஒர் குறுநிலமன்னர் குதிரைப்போட்டி ஒன்று வைத்தார். அப்போட்டியில் நவாபின் படைத் தளபதி ஆப்கன் வீரர் கரீம் ஷா கலந்துக்கொண்டு வெற்றிவாகை சுட்டினார். தஞ்சை மன்னர் வெற்றிபரிசாக வீரசோழப்புரம்  (  இது கங்கைக்கொண்ட சோழப்புரத்திற்கு அருகில் உள்ளே ஊர்) என்ற ஊரில் சில நிலங்களை பரிசாக வழங்கினார்.

பிறகு சில காலங்களுக்கு பிறகு லால்பேட்டை என்ற சிற்றூரில் வேதாளம் குடும்பத்தின் சேக்தாவுது என்பவரின் மகளை திருமணம் செய்தார். பின் சில காலம் வீரசோழபுரத்தில் இருந்தார். அவருக்கு நாதிர் ஷா என்ற செல்வ புதல்வர் இருந்தார். தன் தந்தை மரணம் பின்பு தன் தாய்வழி ஊரான லால்பேட்டை வந்தார்.

நாதிர் ஷா தன் தந்தையை போல் நல்ல திறமை வாய்ந்தவர். அவர் ஒரு நல்ல தலைசிறந்த வர்த்தகர் (Business Man). அது சமயம் லால்பேட்டையில் இருந்து பலர் கீழக்கு நாடுகளான பண்டைய மலேசியா, கம்போடியா, பர்மா, வேட்நாம் போன்ற நாடுகளில் வியாபாரம் செய்தார்கள். அவர்களுடன் நாதிர் ஷா அவர்களும் கீழ்திசை நாடுகளில் வியாபார மேற்க்கொண்டு பல நிலங்களை பொருட்களையும் சேர்த்தார். அவர் தன் தாயின் தந்தையான சேக்தாவுது மூலம் லால்பேட்டை தெற்குத்தெருவில் ஒர் வீட்டைக்கட்டினார் (சுமார் 200 வருடம் முன்). அவ்வீட்டில் தற்சமயம் என் அக்கா இப்போழுது வசிக்கிறார்கள்.
 நாதிர் ஷா வின் ஒரே வாரிசான சேக் மைதீன் ஷா இருந்தார். அந்த வீடு வந்ததற்கு காரணமாக சேக் தாவுது இருந்ததால் எங்கள் குடும்பத்தை தாவுது குடும்பம் என்று தான் பொதுவாக கூறுவார்கள்.
சேக் மைதீன் அவர்களுக்கு பல ஆண் மக்களும் இரண்டு பெண் மக்களும் இருந்தன. அவற்றில் என் தந்தையின் தந்தை ஹசனுத்தீன் ஒருவர். ஹசனுத்தீன் அவர்கள் என் தந்தை ஹாஜி முஹம்மது ஆதம் வாலிப வயது இருக்கும்போழுதே மரணமடைத்துவிட்டார்.

என் தந்தை ஹாஜி.முஹம்மது ஆதம் அவர்கள் தன் மூதையார்களைப் போல் திறமையிலும், வீரத்திலும், பொருட்கள் சம்பாரிப்பதிலும் சிறந்து விளங்கினார்.  தன் சிறு வயதிலேயே பல நிலங்களை வாங்கினார்கள். என் தந்தை தான் அருகில் உள்ளே ஊரில் முதல்முதலில் மருத்துவக்கடை திறந்தார். பின்பு லால்பேட்டையிலும் பரகத் மெடிக்கல் என்றபெயரில் நான் ஒருவயது இருக்கும் பொழுது திறக்கப்பட்டது. என் தந்தை நல்ல கொள்கை பிடிப்புள்ளவர். தன் சிறுவயதிலேயே லால்பேட்டைக்காகவும், லால்பேட்டை ஜாமிஆ அரபிக் கல்லூரிக்காகவும் பல நன்மை செய்துள்ளார். தன் முன்னோர்கள் குதிரைப்போட்டியில் தலைச்சிறந்து விளங்கியது போல் என் தந்தை சைக்கிள் போட்டியில் சிறந்து விளங்கினார்.

இப்படி என் தந்தை பல விஷயங்களில் ஊரில் சிறந்து விளங்கிய சமயத்தில், தன் இளவாலிப பிரயாளத்திலேயே அச்சமயம் மக்களை சீர்திருத்த உருவாகி ஒர் உழைப்பு தான் தப்லீக் ஜமாத். அந்த சமயத்தில் தான் நம் ஊர் ஜாமிஆ அரபிக் கல்லூரியில் மௌலானா அமானி ஹஜ்ரத் தலைமை பேராசியராக இருந்தார்கள். அச்சமயத்தில் தமிழ் நாட்டிற்கு அறிமுகமான இந்த தப்லீக் ஜமாத்துடைய வேளையை அவர்கள் மிகவும் ஆதரித்தது  மட்டுமின்றி ஹஜ்ரத் அவர்கள் முன் நின்று செய்தார்கள். அவர்களின் மாணவர்கள் தான் மௌலானா கலில் அஹ்மது ஹஜ்ரத், கேரளவின் மூஸா மௌலானா, பெங்களூரின் அபுசுஹூது ஹஜ்ரத், புரசைவாக்கம் நிஜாமுதீன் ஹஜ்ரத், மற்றும் பல சிறந்த உலமாக்களும் இவர்களின் மாணவர்கள். அச்சமயத்தில் தான் என் தந்தை முஸ்லீம்கள் மற்றும் இந்துக்கள் ஆகியவர்களிடம் மிகவும் மதிப்பு வாய்ந்தவர்களாக இருந்த சமயத்தில் தான் தன்னை தப்லீக் ஜமாத்துடன் இனைத்துக்கொண்டார்கள்.


You may also like

4 comments:

கொள்ளுமேடு பை.மு.ரிபாயி said...

அஸ்ஸலாமு அலைக்கும் மருத்துவர் யூசுப்...! என்னை உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். உங்களது இந்த பதிவை படித்ததில் சந்தோஷம்.ஆயினும்... நீங்கள் அவற்றை விரிவாக எழுதவில்லை என்றே தோன்றுகிறது.முழுமையாக பதிவிடுங்கள்.

dryousufadam said...

வஅலைக்கு முஸ்ஸலாம் (வரஹ்). Alhamdulillah. நான் மறறோரு பதிவில் என் தந்தையின் வாழ்க்கை பற்றி எழுத உள்ளேன். அதனால், இற்றுடன் என் முன்னோர்களைப்பற்றி நிறுத்திவிட்டேன் .

லால்பேட்டை . காம் said...

அஸ்ஸலாமு அழைக்கும் [வரஹ்} எனது நீண்டநாள் ஆசை தங்களின் தந்தையின் வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டும் என்று ஆனால் எனக்கு அதற்க்கான காலமும் நேரமும் சரியாக வரவில்லை இன்சா அல்லாஹ் உங்கள் முயற்ச்சி வெற்றிபெற இறைவனிடம் துஆ செய்கின்றேன்.

dryousufadam said...

இன்ஷா அல்லாஹ் .௮ல்லாஹ் நல்லருள் புரிவானாக ஆமீன்.

Powered by Blogger.