குழந்தைகளை Brushing செய்ய கட்டாயம் படுத்தலாமா??

/
0 Comments
கேள்வி:
டாக்டர்!,  குழந்தைகளுக்கு எந்த வயதிலிருந்து பற்களை ப்ரஸிங் (Brushing) செய்வது??. என் குழந்தை Brushing செய்ய விருப்புவதில்லை.
என்ன செய்வது?
( Dr., when is the right time to start brushing for kids?? My kid doesn't like brushing at all..wat to do?? )
டாக்டர்.யூசுப் ஆதமின் பதில்கள்;
குழந்தைகளுக்கு பால் பற்கள்  (Milk teeth) பொதுவாக வயது 6 மாதங்கள் முதல் ஈறுகளில் வெளிப்படும். இது ஒவ்வொரு குழந்தைகள் மத்தியில் வேறுப்படும், என்றாலும் 20 பால் பற்கள் அனைத்தும் 6 மாதம் முதல்  3 ஆண்டுகளுக்கு இடையில் வர வேண்டும். உங்கள் குழந்தை 6 மற்றும் 11 வயது வரையிலான கட்டத்தில் தான் அவர்களின் பால் பற்கள் விழுந்து நிரந்தர பற்கள் (Permanent teeth) வரும். 20 பால் பற்கள் விழுந்து 20 நிரந்தர பற்கள் வருவதுமில்லாமல் புதிதாக 12 கடைவாய் பற்கள் (Molar teeth) வரும் ஆக மொத்தம் 32 நிரந்தர பற்கள் (Permanent teeth). இதில் கடைசியாக வரும் permanent.teeth தான் அறிவு பற்கள் (Wisdom teeth) என்பார்கள்.
பற்கள் துலக்குதல் (Tooth Brushing for kids) :
              குழந்தைகளின் வாயில் எப்பொழுது இருந்து பற்கள் வெளிப்படுகிறதோ அக்கட்டத்திலிருந்து சுமார் 2 1/2 வயது அல்லது 3 வயது  வரை மென்மையான துணி அல்லது Gauge Pad (இது பார்மஸியில் கிடைக்கும்) இவற்றைக்கொண்டு குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் இவர்கள் தான் குழந்தையின் பற்களையும், ஈறு மேடுகளையும் சுத்தம் செய்யவேண்டும். இவ்வயதில் இருந்தே தான் அவர்கள் Oral Hygiene பற்றி கவலைப்படவேண்டும். பல் துலக்கவேண்டும் என நிர்ப்பந்திக்ககூடாது.
         பிறகு 3 வயதாகும் பொழுது மென்மையான டூத் ப்ரஸை (Soft kids tooth brush) மற்றும் Kids டூத் பேஸ்ட் ( Kids tooth paste) வைக்கொண்டு பெற்றோர்கள் தான் குழந்தையின் பற்களை காலையிலும், இரவிலும் பற்களை துலக்க ( Teeth brushing) வேண்டும் மேலும் கற்றுக்கொடுக்கவேண்டும். இவ்வாறு 6 மாதங்கள் அல்லது ஒரு வருடம் செய்த பிறகு குழந்தையின் நான்கு வயது முதல் காலையில் குழந்தையை பற்களை துலக்க (Brushing) தானாகவே செய்யக்கூறவேண்டும், சில மாதம் இரவில் பெற்றோர் தன் குழந்தைக்கு Brushing செய்யனும். இவ்வாறாக Step by step செய்தால் எந்த குழந்தையும் பற்களை துலக்க Brushing செய்ய பிரச்சனை செய்ய மாட்டார்கள்.

Child oral hygienic maintainance. (குழந்தைகளின் பல் சுத்தம் மற்றும் பராமரிப்புகள்) இதை  தனியாக பதிக்கிறேன்.





You may also like

No comments:

Powered by Blogger.