பற்களின் சிதைவு (அ) பல் சொத்தை (Dental Decay) எப்படி எற்ப்படுகிறது?

/
0 Comments
பல் சிதைவு நோய் - Dental Caries



கேள்வி,
டாக்டர், நான் சிறிய வயதில் சரியாக பற்களை கவனிக்கவில்லை. எனக்கு எல்லாப்பற்களும் பிரச்சனை தான். நான் அடிக்கடி பல் டாக்டரிடம் போய் வருகிறேன். இப்பொழுது தினதோரும் பற்களை விலக்குகிறேன். உங்கள் இணையதளத்தை பார்த்த பிறகு எனக்கு ஒரு சந்தேகம் டாக்டர், பல் சிதைவு அல்லது பல் சொத்தை ( Dental Decay ) எப்படி ஏற்ப்படுகிறது. தயவு செய்து விளக்கமாக கூறுங்கள்.

டாக்டர்.யூசுப் ஆதமின் பதில்:
               நன்று,  நல்ல கேள்வி தாங்கள் கேட்டீர்கள். இதை அனைவரும் அறிந்துக்கொள்வது மிக மிக அவசியம்.
                 
              பல் சிதைவு அல்லது பல் சொத்தை என்ற பிரச்சனை வருவதற்கு Dental plaque என்ற பொருட்கள் தான் முக்கிய காரணமாக இருக்கின்றது.
        
Dental plaque என்றால் என்ன? இது எப்படி பற்களை சொத்தையாக்குகிறது?
                 Dental Plaque  (டெண்டல் ப்ளாக்) என்ற வெள்ளை நிறத்திலுள்ள பொருள், பாக்டிரியாக்கள், Salivary protein, மற்றும்  வாயிலுள்ள அழுக்கு இவைகளை கலந்த ஓர் கூட்டு அழுக்கு. இது நமது வாயில் கழிவுப்போல் உருவாகிவருகிறது. இவற்றை அகற்றதான் நாம் ஒவ்வொரு நாளும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும். இவைகள் தான் நம் பற்கள் சொத்தை (Dental Decay) ஆகுவதற்கு காரணமாக உள்ள மூலப்பொருள்.
நமது பற்களில் எந்த பிரச்சனைகள் இல்லை, மேலும் நமது பற்கள் நேரான வரிசைகளில் தான் அடுக்கப்பட்டு இருக்கின்றது. இவ்வாறு பற்கள் இருந்தால், சாதாரணமாக பல் துலக்குதலில் மூலம் நமது வாயில் இருக்கின்ற கழிவான டெண்டல் ப்ளாக் (Dental Plaque) என்ற கழிவு சுத்தம் செய்யப்படுகிறது. நமது பற்களுக்கு எந்த பிரச்சணையும் உருவாக வாய்ப்பு இல்லை.
நமது சிறிய வயது பருவங்களில் (அ)  நாம் நோய்வாய்ப்பட்ட காலங்களில் (அ) நமது பற்கள் வரிசையாக இல்லாமல் முன்பின்னாக இருந்தாலும், பற்களில் இடையில் துவாரம் இருந்தாலும் பற்களின் கழிவான டேண்டல் ப்ளாக் (Dental Plaque) பற்களில் சேகரமாகி இத்துடன் நாம் சாப்பிடும் பொருட்களில் உள்ள சாக்கரை போன்ற பொருட்களும் சேர்ந்து பாக்டீரியாக்கள் அமிலங்களை உற்பத்தி செய்து பற்களை சிதைக்க ஆரம்பிக்கிறது. நமது பற்கள் இனாமல் என்ற கடினமான பொருட்களால் வெளிப்புறத்தில் பாதுகாக்கப்படுகிறது. இருந்தாலும் முதலில் பல் இனாமலில் சிறிய துவாரம் போட்டு பிறகு பற்களுக்குள் கழிவான டெண்டல்  ப்ளாக்களும், பாக்டீரியாக்களும், உணவின் சாக்கரைப்பொருட்களும் பற்களுக்கு உள் சேகரமாகிறது. பிறகு பாக்டீரியா கிருமி தன் வேலைகளை செய்து சிறிது சிறிதாக பற்களை சிதைக்கின்றன. கரையான் எப்படி மரத்தூண்களை அழிக்கிறதோ அவ்வாறு பாக்டீரியாக்கள் பற்களின் அகப்பகுதியை அழிக்கிறது மற்றும் சிதைக்கிறது. இவ்வாறு நமது அறிவுக்கு தெரியாமல் ஓர் சிவில் வேலை - Civil Work நடைப்பெறுகிறது. 
                        இப்படியாக நடைப்பெறுகின்ற நிலையில் ஒரு நாள் நாம் கடினப்பொருட்களை கடித்து சாப்பிடும் சமயத்தில் பற்களின் மேற்பொருட்களான இனாமல் உடைந்து பற்களின் சிதைந்த பகுதிகள் தற்பொழுது நமக்கு அறிவுக்கு புலப்படும், இத்துடன் நாம் சாப்பிடும் பொருட்களும் சேகரமாகும். இவ்வாறாக நடைப்பெற்றுக்கொண்டே பற்களின் நரம்புகள், இரத்தம் போன்றவை இருக்ககூடிய  பகுதியான பல் கூழ் ( Dental pulp) இதை பாக்டீரியாக்கள் அடையும் போது வேகமாக அதை சிதைக்கிறது அங்குள்ள நரம்புகள் தந்தி, இன்டர் நெட் வேகத்தில் வலி என்ற செய்தியாக கூறுகிறது. இதைதான் பல் வலி என்பார்கள். இந்த நோய்க்கு ஆங்கிலத்தில் Pulpitis என்பார்கள். இந்த நிகழ்ச்சி நடைப்பெற்ற பின்பும் நாம் வலி நிவாரண மருந்து (Pain Killer tablet) சாப்பிட்டு கவனக்குறைவாக இருந்தால் நம்முடைய தாடை எழும்புகளை இது தாக்கும். இவ்வாறாக நம்முடைய எதிரியான பாக்டீரியாக்களின் பயணம் தொடரும். இதை தடுக்க நாம் திட்டங்கள் செய்தால் தான் நன்று.

டாக்டர்.யூசுப் ஆதம்.
Contact: 00971 55 2340934

Please give like to our Facebook pages and invites other, we are updating our answers in this Facebook page..





You may also like

No comments:

Powered by Blogger.